New Education Policy 2020

Education is the passport to the future, for tomorrow belongs to those who prepare for it today. - Malcolm X
12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவன், பெற்றோர் இருவரும் கிராமப்பகுதிகளில் ஆசிரியராக பணியாற்றியவர்கள் என்ற முன் தகுதியுடன்தான் இந்த #NEP 2020 வரைவை அணுகியிருக்கிறேன்.

Pros:
I like the idea of medium of education in mother tongue till class 5. Children can learn better and faster in a language they can understand. I think this can increase their self-esteem. Parents participation can also increase.
My assumption of mother tongue = regional language.

But at the same time English cannot be replaced. English bring you the world. Indians now travel abroad and study abroad. This is India in 2020 not 1947. 

Cons:
*பாடநூல்களை அந்தந்த மாநில அரசுகள் அச்சடித்துக்கொள்ளலாம் ஆனால் பாடத்திட்டம் மத்திய அரசே வழங்கும். அது பிஜேபியாக இருந்ததாலும் சரி, காங்கிரசாக இருந்ததாலும் சரி எந்த மாதிரியான பாடத்திட்டத்தை அவர்கள் வழங்குவார்கள்? We can never trust the national parties as far as state rights issue is concerned. They will always support centralization.

*NEP முதல் பேரிடி சத்துணவானது விலைவாசி மற்றும் பணவீக்கத்தை பொருத்து தொடர்ந்து மாற்றப்பட்டு வரும்‌. So அரிசி விலை ஏறினால் அரிசி சோறு இல்லை என்கிறார்கள் நேரடியாக.

*நாடு முழுவதுக்கும் ஒரே பாடத்திட்டம் உருவாக்கப்படும் (4.31 / 4.32), இது மாநிலங்களின் தனி அடையாளம் , மொழி, பண்பாடு போன்றவற்றை குலைத்து விடும். இந்தியா போன்ற நாட்டிற்கு ஒரே கல்வித்திட்டம் என்பது முட்டாள்தனம். மேலும் பாடத்திட்டம் மத்திய அரசே வழங்கும் என்பது மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரான செயல்‌.

*மிஷன் நாளந்தா மிஷன் தக்சஷீலா கேட்க நன்றாக இருக்கிறது, ஆனால்  இதன் நோக்கம் வசதியற்ற மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள கல்லூரிகளை மூடவேண்டும் என்பதே. அவற்றை மேம்படுத்த முயற்சிக்காமல் மூட வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம். கிராமப்புற மாணவர்களை படிக்க விடக் கூடாது, இதுதான் உண்மையான நோக்கம்.

*மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதற்கு ஏதுவாக, இதர மொழி ஆசிரியர்களை பிற மாநிலங்களில் இருந்து நியமனம் செய்து கொள்ளலாம் (4.12).  உதாரணமாக, இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து இந்தி ஆசிரியர்களை நியமனம் செய்ய  வாய்ப்பாக அமையும்.

*அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மும்மொழி கொள்கை செயல்படுத்தப்படும். அந்த மூன்று மொழிகளை அந்த அந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் (4.13)

*சமஸ்கிருதம் அனைத்து வகுப்புகளிலும் வழங்கப்படும் என்று கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மற்ற மொழிகளுக்குத் தரப்படவில்லையே ஏன்? இதர மொழிகள் ஆன்லைன் முறையில் வழங்கப்படும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. (4.17 / 4.18). சமஸ்க்ருதத்திற்கு மட்டும் இந்த முக்கியம் ஏன்?

*Sanskrit will be translated into 'simple Sanskrit' and it will be taught by way of "Sanskrit through Sanskrit". 4.16 and then 4.18 which will show that Sanskrit is mandatory. 4.18 starts with - "In addition to Sanskrit" and other language as "options".



Number of times "Sanskrit" is mentioned in the #NationalEducationPolicy2020 draft = 20
Image

Number of times "Tamil" is mentioned in the #NationalEducationPolicy2020 draft = 2 
Image

சமூக நீதி கேட்டோம். சமஸ்கிருதம் பெற்றோம்.

Moreover they are talking about increasing the Higher education GER 
(Gross enrollment ratio), aiming for 50% in 2035, but TN is already reached 49%, link is given below.

https://factly.in/gross-enrolment-ratio-ger-of-higher-education-improves-but-challenges-remain%EF%BB%BF/


Draft can be downloaded from the below link.
https://www.mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/NEP_Final_English.pdf

Comments